முற்றி முதிர்ந்த மரணத்திலும் இல்லை
பால்குடியில் இல்லை
பாலூற்றுகையில் இல்லை
தாய்ப்பால் மறுக்கப்பட்டதும்
முதலில் முளைத்தது பால்பற்கள்
பொக்கை வாயினில்
புன்னகையாய்ப் பூத்தவை
முதலிரண்டு பற்கள்
கீழ்பற்கள் இரண்டெனில்
மேலேயும் இரண்டு
இரண்டு ஒன்று மூன்று இரண்டென
(2132)
பக்கத்திற்கு எட்டாய்
நாற்புறமும் முளைக்க
முப்பத்தியிரண்டையும்
கணக்காய் அழகாய்ப்
பெற்றவர் சிலரே !
முளைத்தது விழுவதும்
விழுந்தப் பின் முளைப்பதும்
பற்களின் சிறப்பு.
விழுந்தது முளைத்த பின்
விழுவதும் இயல்பே !!
மேல் பதினாறும் கிழ் பதினாறும்
பொருந்தவே அமைதல்
ஜீனின் பெருமை.
கிழிக்கவும் குத்தவும்
நறுக்கவும் சிலச் சில
நொறுங்கா உணவையும்
நொறுங்கவே மென்று
நூறாண்டு வாழ உதவிடும் எந்திரன்
சொற்களை வெளிவிடும்
அரணாய்ப் பற்கள்
பற்கள் போனபின்
மொழியிழந்திடும் சொற்கள்
கோபத்தை வெளியில் காட்டி மிரட்டவும்
கோபத்தைக் கடித்து அடக்கவும் பற்கள்
புன்னகைப் பிறக்கக் கருவறை திறக்க
புதிதாய்ப் பூத்ததாய்ப் பளீரிடும் பற்கள்
விலங்கிலிருந்து வந்தவன் மனிதனென
விளக்கிடும் விஞ்ஞானச் சான்றாய் பற்கள்
விதைத்தவன் யாரென அறியவும் பற்கள் :)
No comments:
Post a Comment