Thursday, August 12, 2010

அமெரிக்க விமானமே !!

ஏதோ ஒரு பொழுதில் எங்கோ ஒரு தொலைவில்

எடுத்தெரிந்த காகிதமாய் எனது ஊரில் விமானம்


         ஆனால், இங்கோ! அமெரிக்காவிலோ ,


என்வீட்டு ஜன்னலை எட்டிப்பர்த்துச்செல்லுதே

எண்ணவும் முடியாமல் எண்ணிக்கை நீளுதே !



பறவைகள் பறப்பதை ப்பார்ப்பதோர் அழகெனில்

பறக்காமல் வானிலே நீந்துகின்ற இப்படகை

பார்க்கும் விழி இமைக்காமல் பார்வையின் வேகத்தில்

பிடித்துவிட ஆசையே பறந்துசெல்ல மோகமே .



நிழல் விழும் உயரத்தில் குழந்தைபோல் தவழ்ந்து

நிச்சயித்த உயரத்தில் நிற்பதுபோல் ஊர்ந்து

நினைவின் வேகத்தில் நிர்ணயித்த இடம்தேடி

நிதமும் ஓடுகின்றாய் இரை தேடும் பறவையாய்.



கூட்டிலே அடைத்து வைத்தபுறாக்கள் போலவே

கூட்டமாய் ஓரிடத்தில் குவிந்தே இருப்பினும்

கூடுவிட்டு ச்செல்லுகையில் ஒன்றின்பின் ஒன்றாய்

வேறு வேறு திசை நோக்கி பிரிந்து போதல் உறுதியே .

1 comment:

  1. ஆண்ட்டி, அருமையான தொடக்கம்... எப்படி இருந்த நாம இப்படி அயிட்டோம். மீனம்பாக்கம் போய் வாய்பிளந்து விமானத்தைப் பார்த்த காலம் எனக்கு நினைவிற்கு வருகிறது. இன்று விமானத்தைப் பார்ப்பது சலித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். விமானம் ஒரு அரிய கண்டுபிடுப்புதான்.

    ReplyDelete